வெள்ளூரில் கார் தீப்பிடித்து எரிந்ததில் தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே புதுப்பட்டி நோக்கி சென்ற கார் வெள்ளூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதி தீ விபத்து ஏற்பட்டது. கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் கார் ஒட்டுநர் மற்றும் காரில் பயனித்தவர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து இருவரது உடல்களை மீட்டனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் தி.மு.க முக்கிய பிரமுகரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாண்டியராஜன் என்பதும் கார் ஓட்டுநர் பன்னீர் செலவம் என்பதும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆமத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News