ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி அஷிபாவிற்கு நீதி கேட்டு விருதுநகரில் தமிழக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் சிறுமி ஆசிபா வழிபாட்டு தளத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் மூளிப்பட்டு பங்களா முன்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிறுமி ஆஷிபாவின் கொலை சம்பவத்திற்கு உரிய நீதி வேண்டும், குற்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Latest News