விருதுநகரில் மின் கம்பியை அறுக்கும்போது மின்சாரம் பாய்ந்து 14 வயது பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயச்சந்திரன் என்பவரது மகன் சூசைராஜ் (வயது 14) 9 வகுப்பு பயின்று வரும் நிலையில் விடுமுறை நாட்களில் சக நண்பர்களுடன் ஆங்கங்கே கிடக்கும் பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து விற்பனை செய்து வீட்டு செலவிற்காக பணம் வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே முருகேசன் என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் சிறுவன் சூசைராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பியை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அப்போது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சூசைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவமறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News