விருதுநகர் அருகே ஓடும் பேருந்தில் கோவில்பட்டியை சேர்ந்த நகைக் கடை ஊழியரிடம் 90 சவரன் நகை கொள்ளை.

கோவில்பட்டியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் கோவில்பட்டியை சேர்ந்த மகாராஜா என்பவர் 90 சவரன் நகையுடன் பயணித்துள்ளார். அப்போது விருதுநகரை கடந்த பேருந்து சென்ற போது 90 சவரன் நகை மாயமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பேருந்தை விட்டு இறங்கிய மகாராஜா சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை பெற்றுள்ள காவல்துறையினர் பேருந்தில் பயணித்த மர்ம நபர்கள் நகையை திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பேருந்து பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News