விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு.

வெம்பக்கோட்டை அருகேயுள்ள கீழ சத்திரத்தில் நல்லபெருமாள்,முத்துராமலிங்கம் என்ற இருவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலையில் அழகர் என்ற தொழிலாளி சோர்சா எனப்படும் சரவெடி பட்டாசுக்கு தேவையான ரசாயன மூலப்பொருட்களை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி அழகர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். காலை நேரம் என்பதால் மற்ற தொழிலாளர்கள் பணிக்கு வராததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்தில் பட்டாசு தயாரிப்பு அறை தரைமட்டமானது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இர்ந்தவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய காவல்துறையினர் உரிமையாளர் இருவர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News