விருதுநகர் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி.

விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் வசந்தமாளிகை மண்டபம் முன்பாக சென்ற இரு சக்கர வாகனம் மீது அருப்புக்கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்னல்குடியை சேர்ந்த சக்தியேந்திர பாண்டியன் என்பவர் (வயது 35) சம்பவ இடைத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார், இரு சக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு இளைஞர் மாரிக்கனி படுகாயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விருதுநகர் கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News