விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 தொழிலாளர்கள் பலி..ஒருவர் படுகாயம்.

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் முருகேசன் (ஓய்வு பெற்ற காவலர்) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுக்கான ரசாயன மூலப் பொருட்கள் கலவை செய்த போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்ட்டது. இதில் முருகன், சந்திரன் என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருளப்பன் என்ற தொழிலாளியை (60 சதவீத தீக்காயத்துடன்) மீட்ட சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் இரண்டு பட்டாசு தயாரிப்பு அரைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மற்ற தொழிலாளர்கள் அலறியடித்துக் கொன்டு வெளியேறியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்த ஆய்வு செய்த காவல்துறையினர் விதிமீறலாக பட்டாசு தயாரித்ததேவிபத்துக்கான காரணம் என தெரித்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள உரிமையாளர் முருகேசனை தேடி வருகின்றனர்.

Latest News