விருதுநகர் அல்லம்பட்டியில் பெற்றோர் திருமணம் நடத்தி வைக்காததால் மனம் உடைந்து ரயில்முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை. காவல்துறையினர் விசாரணை.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ஆறுமுகம் (வயது 27). இவர் எண்ணெய் டின் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தினசரி மது அருந்திவந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் திருமண ஏற்பட்டு செய்ய பெற்றோர் மறுத்து வந்த நிலையில் மனம் உடைந்த ஆறுமுகம் இன்று (12.2.18) காலை மது போதையில் அல்லம்ப்பட்டி ரயில்வே தண்டவாள பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். உடலை மீட்டுள்ள ரயில்வே காவல்துறையினர் பெற்றோர்களிடம் தொடர்ந்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Latest News