அல்லம்பட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 3 வயது மகனுடன் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்...கணவர் கனகராஜிடம் போலீசார் விசாரணை.
விருதுநகர் பாரதி நகரை சேர்ந்த கனகராஜ் - தனலட்சுமி (24) தம்பதியினருக்கு கடந்த இரண்டு வாரகாலமாக அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக கணவர் கனகராஜ் வீட்டிற்கு வராத நிலையில் மனஉளைச்சல் காரணமாக மனைவி தனலட்சுமி தனது 3 வயது மகன் ஹர்ஷனுடன் அல்லம்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில் தனலட்சுமி மற்றும் அவரது 3 வயது மகன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட இருவரின் உடலை மீட்டு கணவர் கனகராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் 3 வயது குழைந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News