Colors: Blue Color

இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக இரயில் பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் பிரச்சாரம் மூலம் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விருதுநகரில் 8 வயது சிறுமி 187 முறை குட்டிக்கரனமடித்து பல்வேறு யோகாசனங்களை செய்து கின்னஸ் சாதனை முயற்சி.

விருதுநகர் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி யாக்ஷினி யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல்வேறு யோகாசனங்களை நேர்த்தியாக தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் இன்று கின்னஸ் சாதனை முயற்சிக்காக பூர்ண உஷ்டாசனம், கண்ட பேருண்டாசனம், சக்கரபந்தாசனம் ஆகிய மூன்ற ஆசனங்களை 187 முறை குட்டிக்கரனமடித்தபடி (பல்டி) செய்து அசத்தினார். இந்த முயற்சியை 5 நிமிடத்தில் செய்து சாதனை புரிந்த சிறுமி யாக்ஷினியை அவரது பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். யோகாசனங்களை 187 முறை செய்துள்ளது இதுவே முதன் முறை என்பதால் கின்னஸ் புத்தகத்தில் சிறுமியின் இந்த சாதனை இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் ஶ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் வேலைவாய்ப்புதுறை சார்பாக எமது கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடத்தப்பட்டது. இவ்வளாகத் தேர்வில் பெங்களுரைச் சார்ந்தஅபிபா சிஸ்டம் நிறுவனம் பங்குபெற்றது.
இவ்வளாகத் தேர்வு மூன்று கட்டங்களாக (1.எழுத்து தேர்வு 2. தொழில்நுட்ப தேர்வு மற்றும் மனிதவளத்துறை அதிகாரி நேர்காணல்) நடைபெற்று. எமது கல்லூரி மற்றும் பிற கல்லூரியை சார்ந்த 500 மாணவர்கள் பங்குபெற்று பல பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதிபெற்றனர்.
கல்லூரி துணைத்தலைவர் திரு.வெங்கடேஷ், அபிபா சிஸ்டம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு அதிகாரி திரு. முரளிதரன் அவர்களை கவுரவித்தார், கல்லூரி தலைவர் திரு. திருவேங்கட ராமானுஜதாஸ், கல்லூரி முதல்வர் முனைவர். திரு. சங்கரலிங்கம், மற்றும் வேலைவாய்ப்புதுறை நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். திரு. முரளிதரன் அவர்கள், நிறுவனம் மற்றும் வேலையின் தன்மை குறித்து பேசினார்.

விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில் 150 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு. 8 எடைப்பிரிவுகளாக நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

விருதுநகரில் 32 வது மாவட்ட பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை,சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 150 வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர். 56 கிலோ, 62 கிலோ, 69 கிலோ, 77 கிலோ, 85கிலோ உள்ளிட்ட 8 எடைப்பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுகளிலும் அதிக புள்ளிகள் பெரும் தலா 2 வீரர்கள் வீதம் மொத்தம் 16 பேர் அடுத்த மாதம் மன்னார்குடியில் நடைபெறும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அரசுமானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற குவியும் பெண்கள்...விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக குவியும் பெண்கள் கூட்டம்
தமிழக அரசு வேலை பார்க்கும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வரும் 24ம் தேதி முதல் வழங்குவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனம் விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி கடைசி நாள் என்பதால் இருசக்கர வாகனம் பெறுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள்கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது, மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்பதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வழக்கத்தை விட அதிகளவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பெண்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நாள்தோறும்50 முதல்60 பேர் மட்டும் விண்ணப்பித்து வந்த நிலையில் தற்பொழுது 250 முதல்300 பேர் வரை புதிய ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்து வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்

Latest News