விதிமுறைகளை மீறும் பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமம் ரத்துசெய்யப்படுவது மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை

விருதுநகர; மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் சமீப காலங்களாக விபத்துக்கள் தொடர;ந்து நடைபெற்று வருவதால் உயிர;சேதம் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே, வருங்காலங்களில் விபத்தில்லா பட்டாசுத் தொழில் மேற்கொள்ளும் வகையில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் மருந்துக்கலவைகளின் தன்மை பற்றிய போதிய அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர;களைக் கொண்டு மட்டுமே பட்டாசு உற்பத்தி தொழில் மேற்கொள்ளப்படவேண்டும். மேலும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர;களின் பாதுகாப்புக்கு தேவைப்படும், கையுறைகள், ரப்பர; ஷட், தாமிர மின் தகடு உள்ளிட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மையத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உபகரணங்கள்; தொழிற்சாலைகளில் கட்டாயம் வாங்கி பயன்பாட்டில் வைக்கப்பட வேண்டும். விபத்து ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறு உள்ள இரும்பினால் ஆன தராசு, இடுக்கிகள், வாளிகள், ஆணிகள் போன்ற தளவாடங்கள் எதுவும் பணிக்கூடத்தில் உபயோகப்படுத்தவில்லை என்பதையும்;, தடை செய்யப்பட்ட பொருட்களான பீடி, தீப்பெட்டி, செல்போன், ரேடியோ போன்ற பொருட்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் தொழிற்சாலையின் உhpமையாளர;கள் மற்றும் போர;மேன் ஆகியோர; உறுதி செய்து கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சல்பர; உள்ளிட்ட மூலப்பொருட்களின் இருப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட அளவு மற்றும் இருப்பில் வைக்கப்பட்டுள்ள சல்பர; உள்ளிட்ட மருந்துப் பொருட்களின்; தரம் மற்றும் மூலப்பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளன என்பவை பற்றிய விபரங்களை தொழிற்சாலைகளில் உரிய பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்பட்டு வரப்பட வேண்டும்.
பல தொழிற்சாலைகள் குத்தகை அடிப்படையிலும், அறை வாரியாக குத்தகை அடிப்படையிலும், தொழிற்சாலையில் வளர;க்கப்பட்டுள்ள மரங்களுக்கு கீழே குத்தகைக்கு விடப்பட்டு ஒப்பந்த முறையில் பணியாளர;களை வைத்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஒரே அறையில் வைத்து மிக்சிங், பில்லிங், பேக்கிங் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதாக தெரிய வருகிறது. அனுமதிக்கப்பட்ட 5 கிலோ அளவிற்கு அதிக அளவில் வெடி மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாலும், குறித்த நேரத்திற்கு அதிகமாக வெடிபொருட்கள் கலவை செய்வதாலும், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற இடங்களில் வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாலும் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவதாக தெரிய வருகிறது. இது போன்ற விதி மீறல்கள் இனிமேல் நடவாதிருக்க துணை ஆட்சியர; மற்றும் வட்டாட்சியர; நிலையிலான சிறப்பு ஆய்வுக்குழுக்கள் மூலமாக அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும் வருங்காலங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் திடீர; ஆய்வு செய்யும்;போது விதிமுறைகளை மீறும் பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி அத்தகைய தொழிற்சாலைகளின் உரிமையாளர;கள் மற்றும் குத்தகைதாரர;கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவா; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்துள்ளார;கள்.

Latest News