விருதுநகரில் நடைபெறும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1200 மீட்டர் ஒட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும், கைப்பந்து, கூடைப்பந்து, கபாடி உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெருவோர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்

Latest News