ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரத்த தான முகாம்

ஸ்ரீ வித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஆமத்தூர் ஆரம்ப சுகதார நிலையம் மற்றும் விருதுநகர் மாவட்ட அரசு மருவத்துமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் கலந்து கொண்டு இரத்த தான முகாமினை சிறப்புற நடத்தினர். சுமார் 75 மாணவர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்தனர் . முன்னதாக கல்லூரி நிறுவன தலைவர் உயர்திரு சு. திருவேங்கடராமானுஜ தாஸ் அவர்கள்; கல்லூரி முதல்வர் முனைவர் ளு.சங்கரலிங்கம் முன்னிலையில் நிகழச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் திரு. ஆ. கென்னடி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. P. சரவணப்பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Latest News