விருதுநகர் வட்டம் பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.02.18) நடைபெற்றது.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக
அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து தொழுநோய்
விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து
கொண்ட அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
மாணவர்களிடையே தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்
மாவட்ட அளவில் பள்ளிகளிடையே நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர், தொழுநோயால் பாதிப்புக்குள்ளாகிய 1 பயனாளிக்கு ஊனமுற்றோருக்கான அடையாள அட்டையும்,
மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும், 2 பயனாளிகளுக்கு போர்வைகள், பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்ட காலணிகளையும், டேமின் தொண்டு நிறுவனத்தின் மூலமாக 1 பயனாளிக்கு தையல் இயந்திரமும்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.