கிராம சுயாட்சி இயக்கம் (கிராம சுவராஜ் அபியான்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து

கிராமங்களில் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர; திருமதி.நிர;மலா சீத்தாராமன் அவர;கள் நேரில் சென்று - ஆய்வு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார;கள்.

விருதுநகர; மாவட்டம்;, விருதுநகர; வட்டம் மரு;த்து, கோட்டநத்தம் ஆகிய கிராமங்களில் புதிய மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர; திரு.பிரவீன்குமார;,இ.ஆ.ப., அவர;கள், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர;ச்சி கழகத்தின் தலைவர; மற்றும் மேலாண்மை இயக்குநர; டாக்டர;.சந்தோஷ் பாபு,இ.ஆ.ப., அவர;கள், விருதுநகர; மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவா;கள்;, மத்திய அரசின் சார;பு செயலாளர; திரு.கணேஷ்குமார; அவர;கள் ஆகியோர; முன்னிலையில் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர; திருமதி.நிர;மலா சீத்தாராமன் அவர;கள் நேரில் சென்று ஆய்வு செய்து, கிராம சுயாட்சி இயக்கம் (கிராம சுவராஜ் அபியான்) மூலம் இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ்; 21 பயனாளிகளுக்கும், பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கும், பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும், ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கும், 10 பயனாளிகளுக்கு மண்வள அட்டையினையும், அட்மா வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற சத்திரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த திரு.கந்தசாமி என்பவருக்கு ரூ.25,000ஃ- க்கான காசோலையையும்,இன்று(03.05.18) வழங்கினார;கள்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர; அவர;கள் தெரிவித்ததாவது:-
முன்னேற்றத்தை மனதில் வைத்து அனைத்து மாநிலங்களும்;, ஊராட்சி அளவில் முன்னேற வேண்டுமென்ற உயாpய நோக்கத்தோடு, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் 115 மாவட்டங்கள் 12 துறைகளில் பின்தங்கியாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை 2022க்குள் வளர;ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர; மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தேர;வு செய்யப்பட்டுள்ளன.
பாரத பிரதமர் அவர்களின் உத்தரவுபடி, கிராம சுயாட்சி இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும்; 75மூ க்கு அதிகமான தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கக்கூடிய 16,000 ஊராட்சிகளில் இத்திட்டம் சிறப்பாக நடக்கிறதா என்பது குறித்து பல்வேறு மத்திய அமைச்சர்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பின்;தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு இத்திட்டத்தின் பயன்கள் குறிப்பிட்ட காலவரைக்குள் சேர வேண்டும் என்பதே பரத பிரதமர் அவர்களின் நோக்கமாகும். கிராம மக்கள் முன்னேற்றமடைய தேவையான இந்த 7 அடிப்படையான தேவைகளை செய்து கொடுப்பதன் மூலம் அவா;களாகவே, தங்களின் வாழ்ககைத் தரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும். விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு மே-5 க்குள் இத்திட்டத்தின் பயன்கள் எடுத்துச் செல்லப்படும். மேலும் குறைகள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அனுகினால், குறைகள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகையால் அரசு செயல்படுத்தி வரும் இது போன்ற திட்டங்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் முன்னேற மாவட்ட நிர்வாகம், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பங்களிப்புடன் ஒத்துழைத்து பயன் பெற வேண்டும் என தெரிவித்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர; அவர;கள் தெரிவித்ததாவது:-
கிராம சுயாட்சி இயக்கம் கடந்த ஏப்ரல் 14 முதல் விருதுநகர; மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ‘கிராம சுவராஜ் அபியான்” - கிராம சுயாட்சி இயக்கம் (ஏடைடயபந ளுநடக-புழஎநசயெnஉந ஊயஅpயபைn) மாவட்ட ஊரக வளர;ச்சி துறை மூலமாக 36 வருவாய் கிராமங்கள் தோ;வு செய்யப்பட்டு, மேற்படி வருவாய் கிராமங்களில், சமூக ஒற்றுமையினை மேம்படுத்துதல், ஊரக குடியிருப்பு திட்டத்தில் வீடு இல்லாதவா;களை பயனடையச்செய்தல், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றிய கருத்துருக்கள், விவசாயிகளின் வருவாயினை பெருக்குதல், மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல், பொது சுகாதாரம் மற்றும் ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற குறிக்கோள்களை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது.

விருதுநகர; மாவட்டத்தில் எரிவாயு இணைப்பு இல்லாத அனைத்து தகுதியுள்ள குடும்பத்திற்கும் எரிவாயு வழங்கும் பிரதான் மந்திரி உஜ்ஜவலா திட்டத்தின் மூலம் 97 சதவிகிதமும், மின் இணைப்பு இல்லாத கிராமப்புற வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டத்தின் கீழ் 100 சதவிகிதமும், கிராமப்புறங்களில் வசிக்கும் 50மூ மானிய விலையில் தலா 10 எல்இடி விளக்குகள் வழங்கும் பிரதான் மந்திரி உஜ்ஜவலா திட்டத்தின் மூலம் 68 சதவிகிதமும், இருப்புத்தொகை இல்லாமல் புதிய வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 97 சதவிகிதமும், ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதம மந்திhp ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின் கீழ் 88 சதவிகிதமும், ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கும் பிரதம மந்திhp சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தின் கீழ் 93 சதவிகிதமும், மிஷன் இந்திரா தனுஷ் திட்டத்தின் கீழ் கர;ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பு+சி வழங்கும் பணியில் 100 சதவிகிதமும் இலக்கீடு நிறைவேற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர;கள் தெரிவித்தார;கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர; திரு.இ.ஆனந்தகுமார;,மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர; திரு.சுரேஷ் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர;கள் பலர; கலந்து கொண்டனர;.

Latest News