29வது சாலை பாதுகாப்பு வார துவக்க விழா பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.ராசராசன்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
விருதுநகர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், 29வது சாலை பாதுகாப்பு வார விழாவை (23.04.18 முதல் 29.04.18) முன்னிட்டு,  சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா;வு பேரணியை   மாவட்ட   ஆட்சித்தலைவர்   திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப   அவர்கள்   மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.ராசராசன்,இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு குறித்த விளக்க புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இப்பேரணியில் ஓட்டுநா; பயிற்சி பள்ளிகள், வாகன விற்பனையாளா;கள், ஐசுவு ஓட்டுநா;கள், போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுநா;கள்,  ஊh;க்காவல் படையினா; மற்றும்  காவல்துறை ஓட்டுநா;கள், வாகன உற்பத்தியாளா;கள், அரசு சாரா அமைப்பினா; கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து விருதுநகா; பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.  
இந்நிகழ்ச்சியில் துணைப் போக்குவரத்து ஆணையா;(விருதுநகா;) திரு.ஜே.ஜே.பிரசன்னா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா;கள் திரு.மு.சந்திரசேகரன் (விருதுநகா;), திரு.என்.ரவிச்சந்திரன் (திருவில்லிபுத்தூர்), திரு.சி.நடராஜன் (சிவகாசி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனா;.

Latest News