விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டது.

தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்த தீயணைப்பு வீரகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தீயணைப்பு துறையினர் சார்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தீ தொண்டு நாள் வாரவிழா அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகாசியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இன்று தீ தொண்டு நாள் வாரவிழா அனுசரிக்கப்பட்டது. முதல் நாளான இன்று தீயணைப்பு பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு தூண் அமைத்து மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், தீயினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும்வகையிலான பல்வேறு அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு வழங்கி எடுத்துரைத்தனர்.தீ தொண்டு நாள் வாரவிழாவில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கவும், தீ விபத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும்தொழிற்சாலைகள், கிராமங்கள், பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்க உள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

Latest News