ஶ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 10வது ஆண்டு விழா.

விருதுநகர் ஶ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கல்லூரியின் 10வது ஆண்டு விழாவை 28.03.18 அன்று கல்லூரி அரங்கத்தில் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடினர். இதில் கல்லூரி மாணவர்கள் தங்கள் பெற்றோர் உடன் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக திரு.அருண்பிரசாத்,I.E.S., மண்டல பாஸ்போட் அதிகாரி, மதுரை, கல்லூரி தலைவர் திரு.திருவேங்கட ராமானுஜதாஸ், கல்லூரி முதல்வர் முனைவர். திரு. சங்கரலிங்கம் மற்றும் ஶ்ரீவித்யா கல்வி குழும பிற நிறுவன முதல்வர்கள், நிர்வாகிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் திரு.அருண்பிரசாத்,I.E.S., பேசுகையில் மாணவர்கள் சுயசிந்தனை, வாழ்க்கை பாதை திட்டமிடுதல், சுய திறன் ஆகியவற்றை மேம்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர். திரு. சங்கரலிங்கம் கல்லூரியின் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதில் பல மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆண்டு விழாவை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அண்ணா பல்கலைகழக பருவ தேர்வில் பாட வாரியாக முதல் இரண்டு இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு விருந்தினர் திரு.அருண்பிரசாத்,I.E.S., மண்டல பாஸ்போட் அதிகாரி, மதுரை அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

ஆண்டு விழாவை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அண்ணா பல்கலைகழக பருவ தேர்வில் பாட வாரியாக முதல் இரண்டு இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு விருந்தினர் திரு.அருண்பிரசாத்,I.E.S., மண்டல பாஸ்போட் அதிகாரி, மதுரை அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

Latest News