Colors: Purple Color

மத்திய அரசின் நியாயமற்ற வங்கி கொள்கையை கண்டித்து விருதுநகர் தேசபந்த் திடலில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று (23.2.18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்த் திடலில் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தவறான வங்கி கொள்கையால் ஏழை எளியவர்களுக்கான கல்வி, தொழில் கடன்களை பெற முடியாத நிலையில் நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் எளிதாக பணம் பெற்று மோசடி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வங்கி கொள்கையை மாற்றியமைக்க வேண்டும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு தப்பி ஓடிய நீரவ் மோடியை மத்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தூய்மை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
7 வது ஊதியக் குழுவில் திருத்தம் செய்து துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 18 ஆயிரம் வழங்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்கள் பணியிலிருந்து விடுபடும்போது பணிக் கொடையாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்சன் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் இன்று (13.2.18) ஈடுபட்டனர்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வரும் நிலையில் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவ மாணவியரை துப்புரவு பணியில் ஈடுபடுத்துவதாக கூறி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் பணியில் ஈடுபடாமல் அலட்சியத்துடன் செயல்படுவதால் கழிவறை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட துப்புரவு பணியில் மாணவ மாணவிகளை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டிய மாணவ மாணவியர் இதுகுறித்து பல முறை தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என தெரிவித்தனர். கல்வி பயில அனுப்பும் தங்களது குழந்தைகளை துப்புரவு பணியில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டிய பெற்றோர் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்டு நேரமாக நீடித்த முற்றுகை போராட்டம் பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்த்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

விருதுநகரில் திமுக கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம், 500க்கும் மேற்பட்டோர் கைது
விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விருதுநகர் திமுக எம்எல்ஏ சீனிவாசன் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில அரசுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பினர்.
புpன்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று (12.2.18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அரசு துறை ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சி, உள்ளாட்சித் துறை ஓய்வூதியர்களுக்கு உடனடியாக புரிய ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் A,B,C,D பிரிவு பாகுபாடின்றி பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், திருந்திய ஓய்வூதிய நிர்ணய நிலுவையை 01.01.2010 முதல் 21 மாதங்களுக்கு ரொக்கமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தமிழக அரசு உயர்ந்திய பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் பாட்டாசு தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் .அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு இராஜபாண்டியன் விருதுநகர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வு வ திரும்ப பெற வேண்டும் பாட்டாசு தொழிலாளர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் நகராட்சி சீர்கேட்டை முறைப்படுத்த வேண்டும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்.

Page 2 of 2

Latest News