மாற்றுக் கட்சியிலிருந்து மக்கள் நீதி மய்யத்தில் சேருபவர்களின் வாழ்க்கை நேர்மையாகிவிடும் என விருதுநகரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூடத்தில் கமல்ஹாசன் பேச்சு.

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களை சந்தித்தார். விருதுநகரில் மக்கள் நீதி மய்யம்சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த கமல்ஹாசன் முன்னதாக விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லத்தை பார்வையிட்டு காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுக் கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய கட்சி உறுப்பினர் ஒருவரின் கைக்குழந்தைக்கு காமராஜ் என பெயர் சூட்டினர். இதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன்
விருதுநகர் தேசபந்திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல் பேச்சு :

காமராஜர் போட்ட கல்வி விதை இன்று ஏராளமான ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது

எதிர்காலத்தில் நாம் செய்யும் செயல்களுக்கு சில இடையூறு வரலாம் அதை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மற்றுக் கட்சியிலிருந்து மக்கள் நீதி மய்யத்தில் சேருபவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் எனவும், நமது கட்சியில் இணைபவர்களின் வாழ்க்கை நேர்மையாகிவிடும் எனவும் தெரிவித்தார்.

Latest News