காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டாததை கண்டித்து விருதுநகரில் சரணவன் சுரேஷ் என்பவர் தீக்குளிப்பு.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் விருதுநகர் ஸ்டேட்பேங்க் காலனியை சேர்ந்த சரவணன் சுரேஷ் (வயது 50) என்பவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். தனது வீட்டிலிருந்து காரில் வந்துகொண்டிருந்த அவர் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பாக காரை நிறுத்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனையடுத்து சாலை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தீக்குளித்த சரவணன் சுரேசை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்ததில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்,நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தான் தீக்குளித்ததாக தெரிவித்தார். மேலும் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சரவணன் சுரேஷ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீக்குளிப்பு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Latest News