காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில்

ஈடுபட்ட தி.மு.க உள்ளிட்ட தோழமை கட்சியினருக்கும் காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு. சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக தி.மு.க தலைமையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொன்ட போராட்டத்தின் போது சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர், அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Latest News