விருதுநகரில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பினர் பேரணி நடத்தினர். 450க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணியின் போது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் வ சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடியும், கோரிக்கைகள் பதித்த பதாதைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து துவங்கிய பேரணி, நகராட்சி அலுவலகம், பஜார் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேசபந்த் திடலில் நிறைவு பெற்றது

Latest News