விருதுநகரில் கடந்த 2016-2017ஆம் ஆண்டுக்கான பயிற்காப்பீடு வழங்க கோரிய மனுவை ஆட்சியர் ஏற்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 2016-2017ஆம் ஆண்டு வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பயிற்காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கிட கோரி இன்று (22.3.2018) ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். பல மணி நேரமாக மனு அளிக்க காத்திருந்த விவசாயிகளிடம் ஆட்சியர் சிவஞானம் மனுவை வாங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மனுவை கிழித்தெறிந்து எதிர்பை வெளிப்படுத்தியதுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவாரத்தை நடத்தியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு பயிற்காப்பீடு வழங்ககப்படவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

Latest News