விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (27.2.2018) மண்ணெண்ணெய் கேனுடன் விவசாயி வந்ததால் பரபரப்பு.

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியர்புரத்தை சேர்ந்த விவசாயி காளியப்பன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் கிணறு நீர் பாசனம் மூலமாக விவசாயம் செய்வதற்காக இலவச மின் இணைப்பு வேண்டி கடந்த 2015 ம் ஆண்டு தட்கோ மூலம் விண்ணப்பித்து உள்ளார். விண்ணப்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இது வரை இலவச மின்சாரம் வழங்காத நிலையில் பல முறை மின்சார வாரியதிலும் முறையிட்டும், தாட்கோ அலுவலத்திலும் அலைகழிகபட்ட நிலையில் இன்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி காளியப்பன் மண்ணெண்ணெய் கேனுடம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக ஆட்சியர் அலுவலக வளாகதிற்கு வர முயன்ற போது காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது கோரிக்கை மனுவை ஆட்சியாரிடம் வழங்கபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News