மத்திய அரசின் நியாயமற்ற வங்கி கொள்கையை கண்டித்து விருதுநகர் தேசபந்த் திடலில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று (23.2.18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்த் திடலில் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தவறான வங்கி கொள்கையால் ஏழை எளியவர்களுக்கான கல்வி, தொழில் கடன்களை பெற முடியாத நிலையில் நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் எளிதாக பணம் பெற்று மோசடி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வங்கி கொள்கையை மாற்றியமைக்க வேண்டும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு தப்பி ஓடிய நீரவ் மோடியை மத்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

Latest News