இந்தியாவில் ஆங்கிலக்கல்வி மற்றும் இனமொழி வேருபாடின்றி எல்லோருக்கும் இலவசகல்வி

அளித்த இரு பள்ளிகளில் ஒன்று 26.11.1889 ஆண்டு தொடங்கப்பட்ட “இந்து பிரைமரிப் பள்ளி” ஆகும். இப்பள்ளியே 1892ஆம் ஆண்டு உயர் தொடக்கப்பள்ளியாகி 1895ஆம் ஆண்டு “கூத்திரிய வித்யாசாலா”வாகி 1902ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகி 1978ஆம் ஆண்டு கூத்திரிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது. சரஸ்வதி வித்யாசாலா, சுப்பிரமணிய வித்யாசாலா, திருவள்ளுவர் வித்யாசாலா, காமராசர் வித்யாசாலா, பாலர் பள்ளி, பெரிய கருப்பநாடார் பள்ளி ஆகியவை இதன் கிளைகள்.


“பிடி அரிசிதிட்டம்” (இந்து நாடார் பெண்கள் அரிசி எடுக்கும் போது ஒரு பிடி அரிசியை கலயங்களில் இடுவார். இவ் அரிசியை எல்லா வீட்டினின்றும் சேகரித்து விற்று கிடைக்கும் நிதி ,கோவில் நிதி. பல்வேறு மகமை தரப்பின் நிதி, நகரின் உள்ள பெரியோரின் நன்கொடை, என்று ஒரு சமுதாயமே தங்களுக்கு தேவையான கல்வியை, எல்லோருக்கும் கிடைத்திடவும் “இலாப நோக்கில் இல்லாமல்”, நடத்துவது விருதுநகர் இந்து நாடார்களின் தனிச் சிறப்பாகும்.


K.V.S. Matriculation Higher Secondary School 4.10.1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மகளிருக்காக 1910ஆம் ஆண்டு இந்து நாடார் பெண் பாடகசாலை துவக்கப்பட்டது. இப்பள்ளியே 1916ஆம் ஆண்டு கூத்திரிய பெண் பாடசாலையாகி, 1935ஆம் ஆண்டு கூத்திரிய மகளிர் உயர் தொடக்கப்பள்ளியாகி, 1943ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகி 1978ஆம் ஆண்டு கூத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது. மாங்காய்மச்சு, ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளிகள் ஆகியவைகள் இதன் கிளைகள்.
P.S.Chidhambara Nadar Senior English School (CBSE) 23.06.1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.


விருதுநகர் இந்து நாடார்களால் செந்திக்குமார நாடார் கல்லூரி 1947ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி 23.06.1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


ச. வெள்ளைச்சாமி நாடார் தொழில் நுட்பப்பயிலகக் கல்லூரி 1952ஆம் ஆண்டு காமராசர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி 3.08.1998ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.


A.P. சங்கரலிங்க நாடார் பெண் பாடகசாலை (30.10.1925). V.P. பெரியசாமி நாடார் உயர்நிலைப்பள்ளி (1953). வே.வ.வன்னியப்பெருமாள் தொடக்கப்பள்ளி(1960). இங்கு 1993 முதல் பார்வையற்ற சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


சௌடாம்பிகை தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (1986). ஜோதி வித்யாலயம்(1967). V.M.G. ராஜசேகரன் ரமணி ஸ்ரீசாரதா சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி(1970). Virudhunagar Matriculation School (1991). Noble Matriculation School (2002).


T.E.L.C. நடுநிலைப்பள்ளி, ஏனாதி T.E.L.C. தொடக்கப்பள்ளி (1936). Roman Catholic Schools(1936).


Hajee சிக்கந்தர் ஹவ்வா பீவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, Hajee சிக்கந்தர் ஹவ்வா பீவி நடுநிலைப்பள்ளி, Hajee. P. செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி, இஸ்லாமிய சமுகத்தினரால் நடத்தப்படும். இப்பள்ளிகள் 1924ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.


அரசு பள்ளிகளான சி.ச.சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியனவும் சிறப்பாக இயங்குகின்றன. நகராட்சிப் பள்ளிகளும் உள்ளன.


மாநில அளவில் கல்வியில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Latest News